தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே கிடைத்தது! -ரதன தேரர்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே கிடைத்தது! -ரதன தேரர்


பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே தமது கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதாக அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.


$ads={2}


"கடந்த பொதுத் தேர்தலில் 05 மாவட்டங்களில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அரச தரப்பு ஆதரவாளர்களினால் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்பதை நாம் நன்கு அறிவோம். அதேபோல் கொரோனா அச்சநிலைமை காரணமாக நூற்றுக்கு 15 வீதமானவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமூகமளிக்கவில்லை. மேலும் எமக்கு நிதித்தட்டுப்பாடும் ஏற்பட்டது.


இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் எமக்கு வாக்களித்தனர். இதன்பிரகாரம் எமக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டது.


தற்போது பாரிய இழுபறிக்கு மத்தியில் நாம் அதனை பெற்றுக்கொண்டுள்ளோம்” என அத்துரலியே ரதன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post