இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் மினுவாங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 75 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்து 31 ஆயிரத்து 149ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 570 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 22 ஆயிரத்து 831 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 146 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post