ஜப்பான் நாட்டில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்க ஜப்பான் அரசு தீர்மானம் - பல மில்லியன் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம்!

ஜப்பான் நாட்டில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்க ஜப்பான் அரசு தீர்மானம் - பல மில்லியன் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம்!

145 மில்லியன் மக்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

Pfizer, AstraZeneca மற்றும் Moderna ஆகிய நிறுவனங்களிடம் இருந்து குறித்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருவருக்கு தலா இரண்டு தடுப்பூசிகள் வீதம் 145 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்காக 290 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.


$ads={2}

அத்துடன், குறித்த தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்காக 10 ஆயிரத்து 500 அதி உயர் குளிரூட்டிகளை கொள்வனவு செய்யவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தமது நாட்டு மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post