ஜனாஸா நல்லடக்கம் விடயத்தில் மும்முரமாக இயங்கும் நீர் வழங்கல் அமைச்சர்!

ஜனாஸா நல்லடக்கம் விடயத்தில் மும்முரமாக இயங்கும் நீர் வழங்கல் அமைச்சர்!

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம் (நிலத்தடி நீர் குறைந்த) என அடையாளம் காணப்பட்ட சில பிரதேசங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கிழமை, 11ஆம் திகதி அன்று இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை, பிரதமர் மஹிந்த தலைமையில், அலரி மாளிகையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.

$ads={2}

இதன்போது கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகள் மற்றும் தண்ணீர் ஊற்று குறைந்த பிரதேசங்களை சிலவற்றை அடையாளம் கண்டு அதனுடன் மண்ணின் மாதிகளையும் பரிசோதித்து 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அமைச்சர் வாசுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய உடனடியாக செயற்பட்ட அமைச்சர் வாசுதேவ குறிப்பிட்ட அந்த இடங்களை நிபுணர்களின் ஆதரவுடன் 24 மணித்தியாலங்களுக்குள் பெற்று பிரதமருக்கு சமர்ப்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post