குழந்தை உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு! மயானத்தில் வெள்ளை துணிகள் கட்டப்பட்டன!

குழந்தை உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு! மயானத்தில் வெள்ளை துணிகள் கட்டப்பட்டன!


கொரோனாவால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் உடலை தகனம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் நேற்று (12) பொரளை கனத்தை பொது மயானத்தில் வெள்ளை துணிகள் கட்டப்பட்டு எதிர்ப்பை வெளியிட்டனர்.


முஸ்லீம் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் செயற்பாட்டாளர்கள் வெள்ளை துணிகளை கட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.


$ads={2}


உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வைத்தியர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததும் பின்னர் அந்த குழந்தை உயிரிழந்ததும் குறித்த முஸ்லீம் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதும் கடும் உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post