விபச்சாரம் என்று நான் ஏன் குறிப்பிட்டேன்? சர்ச்சைக்குரிய நியூஸ் பர்ஸ்ட் செய்தி வாசிப்பாளர் பஸ்லுல்லாஹ் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபச்சாரம் என்று நான் ஏன் குறிப்பிட்டேன்? சர்ச்சைக்குரிய நியூஸ் பர்ஸ்ட் செய்தி வாசிப்பாளர் பஸ்லுல்லாஹ் விளக்கம்!

அண்மையில் தனது முகப்புத்தகக் கணக்கில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக பதிவேற்றம் செய்த பதிவொன்றின் விளைவாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறிய நியூஸ் பர்ஸ்ட் செய்தி வாசிப்பாளர் பஸ்லுல்லாஹ் முபாரக்கின் தெலிவூட்டல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

"விபச்சாரம் என்று ஏன் நான் குறிப்பிட்டேன்?

முதலில் அந்தப் பதிவு முற்றிலும் இஸ்லாமியப் பெண்கள் குறித்தானது. #Hashtag பார்த்தால் அது நன்கு தெரியும்.



வேறு இனப் பெண்களை இதில் ஒவ்வொருத்தரும் சம்பந்தப்படுத்திக் கொண்டது, அது அவரவர் சிந்தனை மட்டம்.

இஸ்லாத்தின் பார்வையில் எப்படி என்பதை தவிர அடுத்த மதங்களை இங்கு எங்கும் குறிப்பிடவில்லை

“மறைக்க வேண்டியதை” என்று குறிப்பிட்டது. இஸ்லாத்தின் பார்வையில் ஒரு பெண் என்றால் அது முகத்தையும் மணிக்கட்டுடன் கூடிய கைப் பிரதேசமும் தவிர்ந்தவை மறக்கப்பட வேண்டியவை. 

அவை முஸ்லிமாகிய பெண்கள் கண்டிப்பாக தமக்கு மஹ்ரமான (அதாவது திருமணம் முடிக்க ஆகுமாக்கப்படாதவர்கள் - தந்தை, சகோதர்ர்கள், பிள்ளைகள் தவிர்ந்த ஏனையோர்) ஆண்கள் முன் கண்ணியமாக நடக்க வேண்டும். இது இஸ்லாத்தின் கோட்பாடு. 

நடந்து சென்றால் கூட பார்வையை தாழ்த்திட வேண்டும்.

அத்தோடு, ஒரு பெண் அடுத்த ஆடவர்களைக் கவரும் வண்ணம் பாதையில் நடந்து சென்றால் அது விபச்சாரத்தின் ஒரு பகுதி. ஒரு பெண்ணை தவறான முறையில் கண் கொண்டு பார்த்தல், பேசுதல் இவையனைத்துமே விபச்சாரம் தான். இஸ்லாமிய கோட்பாட்டில். 

இவை பெண்களின் கற்பின் பாதுகாப்புக்காக வலியுறுத்தப்பட்டவை. மட்டுமல்ல. அங்கு நிகாபை பற்றியோ புர்காவைப் பற்றியோ நான் கதைக்கவில்லை. 

$ads={2}

இந்த விடயத்தில் இன்னும் ஒன்றும் இருக்கிறது. இந்த விடயத்தை நிறைய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மதங்களைத் தாண்டி வலியுறுத்திய விடயம்.

இஸ்லாத்தின் பார்வையில் எப்படி என்பதை தவிர அடுத்த மதங்களை இங்கு எங்கும் குறிப்பிடவில்லை

பொதுவாக எடுத்துக் கொண்டாலும், இரண்டு மூன்று பேர் உள்ள இடத்தில் , ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் நடந்து சென்றால் அதை பார்க்கும் பலர் அவளை தப்பான கண் கொண்டுதான் பெரும்பாலானவர்கள் பார்ப்பர். மட்டுமல்ல அவர்களின் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை “ මචං, සුපිරි කෑල්ලක් " මචං සුපිරි බඩුවක් " “ மச்சான் நல்ல துண்டு “ இப்படித்தான் வரும். நானே கண்டிருக்கின்றேன் நிறைய தடவை அவ்வாறு பேசுபவர்களை. அதைத்தான் அங்கு “விபச்சாரம் “ என்று சொல்லியிருக்கிறேன். சிங்களம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வர். 

உலகத்தில் Sex என்ற வார்த்தையை GooGle இல் அதிகம் தேடிய நாட்டு மக்களிடத்தில் ஒழுக்கத்தைப் பற்றி பேசிப் பயனில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பெண்கள் அரைகுறை ஆடை அணிவது அவர்களின் சுதந்திரம் என்று பலரும் கருதலாம். பலரும் இல்லை என்றும் சொல்லலாம். அது அவரவர் சிந்தனை மட்டத்தைப் பொருத்தது.

ஆனால் எந்தவொரு தாயும், தந்தையும் தன் பிள்ளை பாதையில் அரைகுறை ஆடையுடன் அலங்கோலமாய் வலம் வருவதை விரும்ப மாட்டார்கள்.

பெண்களைத் தப்பாக பார்க்க ஆசைப்படுவோர் அதை விரும்புவர்.

முஸ்லிம் பெண்ணாக இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்ற பதிலை என் நண்பருக்கு வழங்கினேன். அதை மற்றைய இனங்களுடன் சிலர் இணைத்துப் பேசி வேறு திசைக்கு திருப்பிவிட்டார்கள். 

அது வருத்தம்தான். இருந்தாலும் பரவாயில்லை. என்னால் மனக்காயங்கள் யாருக்கும் இன்றளவும் ஏற்படவில்லை. இதுதான் முதற்தடவை. அதுவும் சரியான புரிதல் இன்மையால்.

இந்த சம்பவத்தின் பின் பலரும் கதைத்தார்கள். குறிப்பாக பெற்றோர்கள், நேயர்கள், நலன்விரும்பிகள், நண்பர்கள் (மூவினங்கள்) அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 

என்னை அறிந்தவர்கள் என்னை அறிவர்.
விரைவில் சந்திப்போம்!! நன்றி"

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக வசைபாடி jvpnews இணையத்தளம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கே வாசிக்க..

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.