மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதியலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் மேலும்,
$ads={2}
மங்களகம பொலிஸ் நிலையத்திலேயே அதிகளவான வழக்குகள் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திசாநாயக்க என்ற அதிகாரியே கூடுதலான வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
ஒரு சம்பவத்திற்கு நான்கு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். ஒரு விடயத்தை நான்காக பிரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.