அம்பாறையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான மீன்கள்!

அம்பாறையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான மீன்கள்!

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இரு தினங்களாக இறந்த நிலையில் அதிகளவில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

இப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த கடும் மழையின் பின்னர் நேற்றில் இருந்து இவ்வாறு இறந்த நிலையில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

$ads={2}

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு கலப்பு மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி காணப்படுவதுடன், மீன்கள் அனைத்தும் இறந்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு கரையொதுங்கிய மீன்களை நாய் மற்றும் காகங்கள் இரைக்காக தூக்கி செல்வதுடன், அப்பிரதேசமெங்கும் துர்நாற்றமும் வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் உட்பட்ட பலர் நிலைமைகளை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post