மேற்கிந்திய தீவுகள் அணியை “வய்ட் வொஷ்” செய்த நியுசிலாந்து கிரிக்கட் அணி

மேற்கிந்திய தீவுகள் அணியை “வய்ட் வொஷ்” செய்த நியுசிலாந்து கிரிக்கட் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி முழுமையாக கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்துள்ளது.

வெலின்டன் மைதானத்தில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.


$ads={2}

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸிற்காக 460 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி நிக்கோல்ஸ் 174 ஓட்டங்களையும் வாக்னர் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ச்சீமார் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 131 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிளக்வுட் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தி மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர்; தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்கள் பின்னிலைப் பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை, போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி அழைத்தது.

இதன்படி போலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 317 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோன் கெம்பல் 68 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் 61 ஓட்டங்களையும் ஜோசுவா டி சில்வா 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ட்ரென்ட் போல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி மற்றும் கெய்ல் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்ரி நிக்கோல்ஸ்சும், தொடரின் நாயகனாக கெய்ல் ஜேமிசனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

குறிப்பாக இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி, இன்னிங்ஸ் வெற்றிகளை பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post