கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மாலைத்தீவு அரசாங்கத்தினால் தீவு ஒன்றினை வழங்க தீர்மானம்!

கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மாலைத்தீவு அரசாங்கத்தினால் தீவு ஒன்றினை வழங்க தீர்மானம்!

கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை புதைப்பது குறித்து மாலைதீவு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சுகாதார சாத்தியப்பாடுகளை ஆராயுமாறு சுகாதார அமைச்சுக்கு இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சுக்கு வலியுறுத்தியுள்ளது.

மாலைதீவிலுள்ள தீவொன்றில் சடலங்களை புதைப்பதற்கு இடம் வழங்கவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்திருந்தது.


$ads={2}

இது தொடர்பில் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் பதிலளிப்பதற்கான அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு தயாரித்து வருவதாக வௌியுறவுத்துறை அமைச்சு கூறுகின்றது.

அத்துடன் நீர் மட்டம் குறைந்த வரண்ட நிலப்பரப்பொன்றை கண்டறியுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கை தொடர்பில் நிபுணர்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக வௌ்ளைத் துணிகளை கட்டி பொரளை பொது மயானத்திற்கு அருகில் பலர் எதிர்ப்பினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை டேலி மிரர் நாளிதழும் இன்று செய்து வெளியிட்டுருந்தது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post