ஜனாஸா எரிப்பு விவகாரம் : நாடளாவிய ரீதியில் தொடரும் எதிர்ப்புகள் ; மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவும் தாக்கல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா எரிப்பு விவகாரம் : நாடளாவிய ரீதியில் தொடரும் எதிர்ப்புகள் ; மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவும் தாக்கல்

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


$ads={2}

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக, ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு உடனடியாக தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி இந்த ரிட் மனு சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.

தலையில் காயத்திற்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த தனது தந்தையை, கொவிட் 19 இனால் மரணித்ததாக கூறி பலவந்தமாக எரித்தமைக்கு எதிராக மகன் ஒருவர் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். தெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த எம்.ஆர்.எம். நிபால் என்பவரே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் சஞ்ஜீவ முனசிங்க , சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமது வீட்டில் எவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் தந்தைக்கு மாத்திரம் கொவிட் இருப்பதாக கூறி ஜனாஸாவை தகனம் செய்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ரிட் மனு எதிர்வரும் 2021 ஜனவரி 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் விடயங்களை முன்வைக்க பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே முஸ்லிம்களைவிட, கத்தோலிக்க , அங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபைகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் போதகர்களாலும் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்யும் கட்டாய நடவடிக்கைக்கு எதிராக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உடல்களை எரிக்கும் செயற்பாட்டிற்கு இவர்கள் பொரளை மயானத்தில் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜனாஸாக்களை தகனம் செய்வதைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் பல இடங்களில் தொடர்ச்சியாக எதிர்ப்புகள் முன்வைக்கப்ப்ட்டு வருகின்றன. பல இடங்களில் இது தொடர்பில் வெள்ளைத் துணி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 M. F. M. Fazeer

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.