
சதொச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் (15) அவர் திருகோணமலையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியல் உத்தரவைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றில் சந்தேக நபர்கள் மூவர் இணையவழி ஊடாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு அளிக்கப்பட்டது.