
கிளிநொச்சியில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
விசாரணைகளின் பின்னர் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும். ஏனெனில் இதை ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பியிருக்கமாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள், அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புகின்றேன்” என அவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் கடந்த 15ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.