
உலக நாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக் கூடியவாறான தொழிற்சாலை ஒன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிய முடிகிறது.
இத்தகைய செயற்பாடுகள் இந்த பௌத்த பூமியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு மகா சங்கத் தேரர்கள் ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
$ads={2}
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அவ்வாறிருக்கையில் உலக நாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக் கூடியவாறான தொழிற்சாலை ஒன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறியமுடிகிறது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்கு உதவிய மகாசங்கத் தேரர்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் இந்த பௌத்த பூமியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்படக்கூடாது.
இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். மாறாக இது நிறுத்தப்படாவிட்டால், தொழிற்சாலை செயற்பட ஆரம்பிக்கும் முதலாவது நாளில் விலங்கு ஒன்றுக்குப் பதிலாக நான் எனது தலையைப் பலிகொடுப்பேன். முதலில் எனது கழுத்தை அறுத்து இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
-நா.தனுஜா