கண்டி - கம்பளை, கெலிஓயா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திடீர் பூட்டு! முற்றாக முடக்கப்படுமா?

கண்டி - கம்பளை, கெலிஓயா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திடீர் பூட்டு! முற்றாக முடக்கப்படுமா?

kandy gampola gelioya

கண்டி மாவட்டத்தின் கம்பளை நகரில் கடை கடையாக சென்று தமது நிறுவன பொருட்களை விநியோகிக்கும் பிரபல பிஸ்கட் நிறுவனம் ஒன்றின் விற்பனை முகவர் ஒருவர் சில தினங்களுக்கு முன் அங்கு வந்து சென்றுள்ளார்.


பின்னர் அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா மற்றும் பிலிமத்தலாவ போன்ற பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் பூட்ட நேற்று (28) மாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


$ads={2}


அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளின் இயங்குகின்ற சில்லறை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றுகின்ற அனைவரையும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யாமல்  வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த வர்த்தக நிலையங்கள் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post