பேருந்துகளில் செல்வோர் கவனத்திற்கு - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

பேருந்துகளில் செல்வோர் கவனத்திற்கு - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கைகளில் சாதாரண உடை அணிந்த பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்காக சுமார் 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பின்பற்றுகின்றனவா மற்றும் சாரதிகள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதைக் கண்டறிய இந்த பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பேருந்துகள் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post