ஜனாதிபதிக்கு நான் முழு ஒத்துழைப்பினை வழங்குவேன் - ரதன தேரர்

ஜனாதிபதிக்கு நான் முழு ஒத்துழைப்பினை வழங்குவேன் - ரதன தேரர்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை பலப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.

அபேஜனபல வேகய கட்சி தீர்மானமிக்க அரசியல் கட்சியாக பலம் பெறும் என தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,


$ads={2}

இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அபேஜனபல வேகய கட்சி பல சவால்களுக்கு மத்தியில் சுமார் 69 ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொண்டது.

அபேஜனபல வேகய கட்சி 5 தேர்தல் மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் அரசியல் சூழ்ச்சியின் காரணமாகவே இரத்து செய்யப்பட்டன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டன. இதுவும் நாங்கள் குறைவான வாக்குகளை பெறுவதற்கு ஒரு காரணியாக அமைந்தது.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட 69 வாக்குகளுக்கு 1 தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது.

இந்த ஒரு தேசிய பட்டியல் ஆசனம் அபேஜனபல வேகய கட்சிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றிவித்தது.

தேசிய பட்டியல் ஆசன முரண்பாட்டுக்கு தீர்வை காண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.நீதிமன்ற தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்று குறிப்பிட முடியாது. பாராளுமன்றத்தில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தில் வெற்றிடம் நிலவுவது 69 ஆயிரம். மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு முரணாகும்.

ஆகவே இதற்கு தீர்வை காணும் நோக்கில் அனைத்து மட்டத்திலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. தேசிய பட்டியல் ஆசனத்துக்கு என்னை தெரிவு செய்ய ஞானசார தேரர் உட்பட அனைவரும் இணக்கம் தெரிவித்தார்கள்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை முழுமையாக செயற்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post