இன்று விமான விபத்தில் உயிரிழந்த விமானி தொடர்பாக வெளியான மேலதிக தகவல்!

இன்று விமான விபத்தில் உயிரிழந்த விமானி தொடர்பாக வெளியான மேலதிக தகவல்!

திருகோணமலை – கந்தளாய் சூரியபுர எனும் பகுதியில் முறிந்து விழுந்த விமானத்தில் பயிற்சி விமானி உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


கேகாலையை சேர்ந்த அமரகோன் என்கிற பயிற்சி பெற்றுவரும் விமானியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படைத் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரண தெரிவித்தார்.


$ads={2}


இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையில் இணைந்திருந்ததுடன் அதே வருடத்திலேயே பயிற்சி விமானியாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.


இந்நிலையில், சீனக்குடா விமானத் தளத்திலிருந்து இன்று (15) பிற்பகல் 1.05 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பிற்பகல் 1.15 அளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பினை குறித்த PT-6 ரக விமானம் இழந்த நிலையில் விபத்துக்கு உள்ளானது.


அதனையடுத்து அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post