உப கொத்தணி உருவாகும் நிலை இல்லையேல் தனிமைப்படுத்தல் நிலை அகற்றப்படும்! பொலிஸ் மா அதிபர்

உப கொத்தணி உருவாகும் நிலை இல்லையேல் தனிமைப்படுத்தல் நிலை அகற்றப்படும்! பொலிஸ் மா அதிபர்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உப கொத்தணிகள் உருவாகும் நிலை இல்லை என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியவுடன் கொரோனா தடுப்பு பணிக்குழு தனிமைப்படுத்தல் நிலையை அகற்றும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


மேலும் இதுவரை கொழும்பில் ஒன்பது பொலிஸ் பிரிவுகள் மற்றும் 25 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


$ads={2}


இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் குறிப்பாக தொடர்மாடிகளில் விரைவான அன்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் சுகாதார அதிகாரிகள் உப கொத்தணிகளின் நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் கொரோனா தடுப்பு பணிக்குழு அனைத்துப் பகுதிகளின் தனிமைப்படுத்தலையும் அகற்றும் என தெரிவித்தார்.


இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரை 1,256 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post