முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்த ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து மாலைதீவு கவனம்!

முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்த ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து மாலைதீவு கவனம்!


கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மாலைதீவு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் கோரிக்கை குறித்து மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் கவனம் செலுத்தி வருவதாக, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சாஹிட் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் சாஹிட் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதேவேளை, உலர்ந்த காணியொன்றில் கொங்க்ரீட் புதைகுழிகளை அமைத்து அதில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post