தென்னிந்திய நடிகர் விஜய்க்கு சொந்தமாக இலங்கையில் உள்ள சொத்துக்கள் சுவீகரிக்கப்படுவதாக வெளியான செய்தியை அவரது தரப்பினர் நிராகரித்துள்ளனர்.
டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.
$ads={2}
கொழும்பிலுள்ள விஜய்க்கு சொந்தமான காணியொன்றை பெரும்பான்மை இனத்தவர்கள் கையகப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருவதாக தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சமூக வலைத்தளங்களும் செய்திகளை வெளியிட்டிருந்த பின்னணியிலேயே, இன்று இந்த செய்தி பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.