பிலிமதலாவை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

பிலிமதலாவை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

பிலிமதலாவையிலுள்ள உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 10 தொழிலாளர்களுக்கு கோரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


$ads={2}

 சமீபத்தில், பிலிமதலாவ நகரத்தில் ஐந்து ஆடைத் தொழிலாளர்கள் மீது எழுமாற்றாக  பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் இருவருக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 47 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், தடுமள் போன்ற வியாதிகளுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத் துறையிடம் தெரிவித்ததையடுத்து, ஐந்து ஊழியர்கள் மீது சுகாதாரத் துறை எழுமாற்றாக பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியதாகவும் மத்திய மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்காக அனுப்ப சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மற்ற தொழிலாளர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post