
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 03ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. நீண்ட குழப்பங்கள், வழக்குகளுக்கு பிறகு ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த மாதம் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது.
மறுபுறம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடியாது என டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவியேற்பு விழாவன்று வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடியாது என டொனால்ட் ட்ரம்ப் தனது நெருக்கமான வட்டாரத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது உதவியாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
$ads={2}
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறாமல் ட்ரம்ப் இதேபோல தொடர்ந்து அடம்பிடித்தால், அமெரிக்காவில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும். ஜனவரி 20ஆம் திகதியன்று ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் பதவியேற்கவுள்ளனர். ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த வழக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகையை விட்டு டொனால்ட் ட்ரம்ப் வெளியேற மறுத்தால், இதுவரை அவருக்கு பாதுகாப்பளித்து வந்த சீக்ரட் செர்வீஸ் அதிகாரிகளை அவரை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றுவார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.