
தென்னாபிரிக்காவில் பரவ ஆரம்பித்திருக்கும் அதிவேகமாக பரவும் 501.V2 எனும் வைரஸ்! மக்கள் பெரும் அச்சத்தில்!
தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
$ads={2}
ஏற்கனவே, இங்கிலாந்திலும் இதேபோன்ற புதிய கொரோனா வைரஸால் மக்கள் பீதியில் தள்ளப்பட்டனர். லண்டலில் இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் முன்பை விட வேகமான கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்னாப்பிரிக்க சுகாதார அமைச்சர் ஜ்வெலி மெக்கிஸ் ட்விட்டரில்,
"501.V2 என பெயரிடப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பொதுமக்களிடையே பரவி வருவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இப்போது நாம் சந்திக்கும் கொரோனாவின் இரண்டாம் அலையும் இப்புதிய வைரஸால்தான்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய வைரஸ் பரவி வருவது பல்வேறு அரசுகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் புதிய வைரஸை தடுக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. எனினும், புதிய கொரோனா குறித்து தென்னாப்பிரிக்காவுடன் ஆலோசித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.