
இந்துருவ பகுதியின் கிழக்கு துன்துவ மற்றும் மேற்கு துன்துவ ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெஹியோவிட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மதியம் தனிமைப்படுத்தப்பட்டது.
$ads={2}
தல்துவ வாரச்சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட 72 பேருடைய PCR பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கீழ் தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த அனைவரும் தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.