ஜனவரி முதல் அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படுவது தொடர்பிலான தகவல்!

ஜனவரி முதல் அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படுவது தொடர்பிலான தகவல்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.


$ads={2}

ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் வருகைத்தந்த பின்னர் கொரோனா நிலைமையை கருத்தி கொண்டு அவசியமான நபர்கள் பணிக்கு அழைக்கப்படுவது போதுமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் பணிக்கு வரும் போது பற்றிக் அல்லது தங்களுக்கு பிடித்த பொருத்தமான உடைகளில் வரலாம் என அவர் கூறியுள்ளார்.

$ads={1}
நாட்டில் கொரோனா நிலைமையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்தால், அரச ஊழியர்கள் வழமையை போன்றே கடமைக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

அந்த சுற்றறிக்கைக்கமைய கடமைக்கு வருகைத்தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post