அறிவியல் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்! மூட நம்பிக்கையால் அல்ல! மங்கள சமரவீர

அறிவியல் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்! மூட நம்பிக்கையால் அல்ல! மங்கள சமரவீர

அறிவியல் மூலமே நாட்டையும் சமூகத்தை முன்னேற்ற முடியும் எனவும் மூட நம்பிக்கைகளால் முன்னேற்ற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மூட நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு முன்னேறிய நாடுகள் எதுவும் உலகில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (13) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களை அடக்கம் செய்யாது தகனம் செய்வது தொடர்பாக எதிர்க்கவில்லை.

$ads={2}

எனினும் மக்களின் மத நம்பிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை என அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் இஸ்லாம் மதத்தினருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்காமல் இருப்பது சிக்கலுக்குரியது. அடிப்படைவாதிகள் சிலரது மூட நம்பிக்கைகளை பிடித்துக்கொண்டு, சிறிய தரப்பினரின் தேவைகளுக்காக இஸ்லாம் மதத்தினரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post