மன உளைச்சலா? தற்கொலையை தடுக்க தொலைபேசி சேவை அறிமுகம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மன உளைச்சலா? தற்கொலையை தடுக்க தொலைபேசி சேவை அறிமுகம்!!

24 மணி நேர அபயம் தொலைபேசி அழைப்பு சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் அபயம் தொலைபேசி சேவையானது நடைமுறைக்கு வருகின்றது. 

”தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியவை”. ஆகையினால் 0710712345 24 தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் அழைப்பு சேவையை மேற்கொள்ள முடியும்.

நமது பகுதிகளில் தற்கொலை செய்பவர்களின் வீதமும் தற்கொலை முயற்சிப்பவர்களின் வீதமும் நாட்டின் சராசரி நிலையோடு ஒப்பிடுகையில் அதிகமாக காணப்படுகின்றது.

குறிப்பாக சில பாடசாலை மாணவர்கள் சில பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்களாக பலர் விரக்தி நிலை ஏற்படுகின்றபோது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

பல்வேறு காரணங்களினால் விரக்தி நிலை ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படுகின்றது அச்சமயத்தில் குறிப்பிட்ட நபர்கள் அல்லது அவர்களுடன் நெருக்கமாக உள்ளவர்கள் இந்த சேவையை பெறுவதற்காக தொடர்பினை ஏற்படுத்த முடியும்.

$ads={2}

மேலும், எந்தவொரு நபரும் தனக்கு ஏதாவதொரு மனநெருக்கீடு ஏற்படும் போது உதவியை பெறுவது சம்பந்தமாக ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது எந்த நேரம் ஆயினும் மருத்துவ அதிகாரி ஒருவர் உடன் பதில் அளித்து உரிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு செய்ய வேண்டிய விடயங்களையும் தெளிவாக குறிப்பிடுவர். தொடர்பை ஏற்படுத்தும் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.