லங்கா பிரீமியர் லீக் கடைசி லீக் போட்டியில் கலம்போ கிங்ஸ் அணி அபார வெற்றி; அரையிறுதி போட்டிகளின் நேரம் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கா பிரீமியர் லீக் கடைசி லீக் போட்டியில் கலம்போ கிங்ஸ் அணி அபார வெற்றி; அரையிறுதி போட்டிகளின் நேரம் மாற்றம்!


ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று (11) இரவு நடைபெற்ற கலம்போ கிங்ஸ் அணிக்கும் தம்புள்ள வைக்கிங் அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் கடைசி லீக் போட்டியில் கலம்போ கிங்ஸ் அணி 6 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றது.


இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்ற கலம்போ கிங்ஸ் 04 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலுள்ள கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியை ஓர் அரை இறுதியில் எதிர்த்தாடும்.


அணிகள் நிலையில் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள தம்புள்ள வைக்கிங் 08 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலுள்ள ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியை மற்றைய அரை இறுதிப் போட்டியில் மோதும்.


தம்புள்ள வைக்கிங் அணியினால் நிர்ணியிக்கப்பட்ட சவால் மிகு 204 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 04 விக்கெட்களை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


$ads={2}


லோரி இவேன்ஸ், காய்ஸ் அஹ்மத் ஆகியோர் குவித்த அதிரடி அரைச் சதங்களும் அஷான் ப்ரியஞ்சனின் திறமையான துடுப்பாட்டமும் கலம்போ கிங்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.


கலம்போ கிங்ஸ் துடுப்பெடுத்தாடியபோது ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 04ஆவது ஓவரில் 03 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


ஆனால், ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காமல 108 ஓட்டங்களைக் குவித்து லங்கா பிறீமியர் லீக் போட்டியில் முதலாவது சதத்தைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான லோரி இவேன்ஸ், இன்றைய போட்டியிலும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து கலம்போ கிங்ஸ் அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.


டெனியில் பெல் ட்ருமண்டுடன் இரண்டாவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த லோரி இவேன்ஸ் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட கடும் உபாதை காரணமாக தற்காலிக ஓய்வு பெற்றார். அவர் 23 பந்துகளை எதிர்கொண்டு 05 பவுண்ட்றிகள், 04 சிக்சர்களை அடித்திருந்தார்.


லஹிரு உதார (01), பெல் ட்ருமண்ட் (14) ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.


ஆஷான் ப்ரியஞ்சனும் திக்ஷில டி சில்வாவும் திறமையாக துடுப்பெடுத்தாடி 04ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது திக்ஷில டி சில்வா 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.


எவ்வாறாயினும் 05ஆவது வீக்கட்டில் ஜோடி சேர்ந்த அஷான் ப்ரியஞ்சன், காய்ஸ் அஹ்மத் ஆகிய இருவரும் 31 பந்துகளில் பிரிக்கப்படாத 77 ஓட்டங்களைப் பகிர்ந்து கலம்போ கிங்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.


$ads={2}


காய்ஸ் அஹ்மத் 22 பந்துகளில் 05 சிக்ஸ்கள், 02 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்கமால் 50 ஓட்டங்களைப் பெற்றார்.


அஷான் ப்ரியஞ்சன் 28 பந்துகளில் 04 பவுண்ட்றிகள், 02 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றார்.


முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைக்கிங் அணி 20 ஓவர்களில் 03 விக்கெட்களை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களைக் குவித்தது.


ஆரம்ப வீரர் நிரோஷன் திக்வெல்ல, ஏஞ்சலோ பெரேரா ஆகியோர் குவித்த வேகமான அரைச் சதங்கள் தம்புள்ள வைக்கிங் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தன.


ஆரம்ப ஜோடியினரான சமித் பட்டேலும் நிரோஷன் திக்வெல்லவும் 4.4 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சமித் பட்டேல் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


அவரைத் தொடர்ந்து காய்ஸ் அஹ்மதின் அடுத்த பந்திலேயே உப்புல் தரங்க ஆட்டமிழந்து சென்றார்.


எனினும் நிரோஷன் திக்வெல்லவும் ஏஞ்சலோ பெரேராவும் வேகமாக ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.


நிரோஷன் திக்வெல்ல 40 பந்களில் 09 பவுண்ட்றிகள், ஒரு சிக்சர் உட்பட 65 ஓட்டங்களைப் பெற்றார்.


தொடர்ந்து ஏஞ்சலோ பெரேராவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் பிரிக்கப்படாத 04ஆவது விக்கெட்டில் கடைசி 29 பந்துகளில் 59 ஓட்டங்களப் பகிர்ந்தனர்.


ஏஞ்சலோ பெரேரா 51 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், 02 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 15 பந்துகளில் 05 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில் காய்ஸ் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


சகலதுறைகளிலும் பிரகாசித்த காய்ஸ் அஹ்மத் ஆட்டநாயகனானார்.


இந்நிலையில், நாளை மறுநாள் (14) முதல் இடம்பெறவிருக்கும் இரு அரையிறுதி போட்டிகளும் இலங்கை நேரப்படி மாலை 7.00 மணிக்கே ஆரம்பிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


முதல் அரையிறுதி போட்டி 

கொலம்போ கிங்ஸ் Vs கோல் க்ளாடியேட்டர்ஸ்

13th December | Sunday – 7.00 PM

 

இரண்டாவது அரையிறுதி போட்டி

தம்புள்ள வைக்கின் Vs ஜப்னா ஸ்டாலின்ஸ்

14th December | Monday – 7.00 PM


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.