வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!

sri lanka bureau of foreign employment yazhnews

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழமையான கடமைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தில் எந்த வித உண்மையும் இல்லையென்று பணியகம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பணியாற்றும் சாரதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கடந்த 08ஆம் திகதி PCR பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.


$ads={2}


இதற்கமைவாக இவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கு அமைவாக இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தார்.


அன்றைய தினம் சாரதியுடன் தொடர்புப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இதுதொடர்பாக எமக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையில் இவர் தொடர்புப்பட்ட யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதேபோன்று நேற்று முன்தினம் (09) கிறுமி தொற்று நீக்குவதற்காக அலுவலகம் மூடப்பட்டதாகவும், மீண்டும் நேற்று (10) தொடக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தனது வழமையான சேவைகளை முன்னெடுத்துள்ளது.


இதற்கமைவாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 24 மணித்தியாலயமும் செயல்பாடும் தகவல் பீடம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.


$ads={2}


இதேபோன்று அலுவலகத்தின் விமான நிலைய களஞ்சிய சேவைகள் இடம்பெற்று வருவதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.


மாகாண அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் வழமைப்போன்று சேவைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post