எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை தொடர்பாக வெளியான அறிவித்தல்!

எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை தொடர்பாக வெளியான அறிவித்தல்!


நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுதினம் (25) முதல் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 


எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவையில் ஈடுபடுத்தப்படும். பிரதான ரயில் மார்க்கத்தில் 4 ரயில் சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.


$ads={2}


இதற்கமைய கண்டி, பொல்ஹாவெல பகுதிக்கு ஒரு ரயிலும் ரம்புகனவுக்கு 2 ரயில்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படும். புத்தளம் பாதையில் சேவையில் ஈடுபடும் ரயில் சிலாபம் வரையே செயற்படும்

தெற்கு வீதியில் ஒரு ரயிலும் களனி மார்க்கத்தில் ஒரு ரயிலும் கரையோர பாதையில் 2 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும். தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.


பண்டிகை காலத்தில் பொதுமக்கள் வெளியிடங்களில் நடமாடுவதையும் ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் வகையில் 25.26. மற்றும் 27 ஆம் திகதிகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 


பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி ரயில் சேவைகளைப் பயன்படுத்துவது கட்டாயமாகும் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post