பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

கோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

$ads={2}

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் திறப்பது சாத்தியமற்றது என்றபோதிலும், அதனை ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளை தொடர்ந்து மூடி வைத்திருப்பது பொருத்தமான கொள்கை அல்ல என அவர் கூறியுள்ளார்.

அனைத்து வகுப்புகளையும் உள்ளடக்கிய பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வேலைத்திட்டம் இன்றையதினம் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post