வெளிநாட்டவர்களிடம் ஏமாந்து 3 கோடிக்கும் மேல் இழந்த இலங்கை பெண்!

வெளிநாட்டவர்களிடம் ஏமாந்து 3 கோடிக்கும் மேல் இழந்த இலங்கை பெண்!

கொழும்பிலுள்ள பணக்கார பெண் ஒருவரை வெளிநாட்டவர்கள் ஏமாற்றி பெருமளவு பணம் மோசடி செய்துள்ளனர்.

குறித்த பெண்ணிடமிருந்து 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் நைஜீரியா நாட்டவர்களினால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

$ads={2}

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குற்ற விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது நைஜீரிய நாட்டவர்களால் பாரிய பணம் மோசடி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி ஊடாக இந்த வசதியான பெண்ணுடன் தொடர்பினை ஏற்படுத்திய நைஜீரிய நாட்டவர்கள் அவரை ஏமாற்றி மோசடியான முறையில் பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியாளர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post