இரத்தினபுரியில் கொரோனா பரவுவதாக கூறப்படும் செய்தியின் உண்மை தன்மை என்ன?

இரத்தினபுரியில் கொரோனா பரவுவதாக கூறப்படும் செய்தியின் உண்மை தன்மை என்ன?


இரத்தினபுரியில் கொடிகமுவ பிரதேசத்தில் 08 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அந்த கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வலம்வரும் செய்தி போலியானது. 


கொடிகாமம் பிரதேசத்தில் ரயில் ரோட் (ஆற்றுப்பக்கம்) ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் குடுகள்வத்தையில் ஒரு கடையில் வேலை செய்த ஒரு நபர் அதனால் ரயில்ரோட் (ஆற்றுப்பக்கம்) மட்டும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 


முழு குடிக்கமுவ பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் செய்து அப்பட்டமான பொய்யாகும். 


இந்த நபரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அருகில் உள்ள சிலருக்கும் PCR நேற்று (14)  செய்யப்பட்டது.


பொம்பகல பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக பொம்பள பிரதேசத்தில் ஒரு குறித்த சில வீடுகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது. அதன்பின் அங்குள்ள சிலருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று மறுபடியும் அந்த பிரதேசம் முடக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. 


அதேபோன்று மிஹிதுகம எனும் பிரதேசத்தில் ஒரு வாரத்துக்கு முன் இறக்குவானையில் நடந்த திருமண வைபவத்திற்கு சென்றவர்கள் 08 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனை அடுத்து அவர்களுடைய வீட்டை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தது. தற்போதும் முடக்கப்பட்டு இருக்கின்றது.


$ads={2}


அதேபோன்று குடுகல்வத்தை சேர்ந்த ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் எஹலியகொட சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரையும் அவர் குடும்பத்தையும் தனிமைபடுத்தி PCR பரிசோதனை செய்யப்பட்டது.


அதேபோன்று பொம்பகளயை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், கொடிகமுவ சேர்ந்தவரும்,  ஹோட்டல் வேலை செய்தவரும் குடுகல்வத்தையில் வேலை செய்யும் நபர்கள் என்பதால் குடுகல்வத்தையில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் PCR பரிசோதனை நேற்று (14)  செய்யப்பட்டது. 


அதேபோன்று குடுகல்வத்தையில் அமைந்திருக்கும் பள்ளிவயலில் கொடிகமுவ கொரோனா தொற்று ஏற்பட்டவரின் மகன் இஷா தொழுகை நடத்தியதால் அவர் பின்னால் தொழுதவர்களுக்கும் PCR இன்று (14) செய்யப்பட்டது.

 

அதேபோன்று கெட்டன்தொலை பிரதேசத்தில் தொழிற்சாலையில் வேலை செய்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் நேற்று (14) PCR பரிசோதனை எடுக்கப்பட்டது. 


அதன் முடிவு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்பதே உண்மையான தகவலாகும்.


மற்றைய அனைத்தும் வதந்திகள் மாத்திரமே!


அதே போன்று பல பிரதேசங்களில் இருந்து இரத்தினபுரியில் வியாபாரத்திற்கு வருவதால் அவதானம் தேவை.


-நுஸ்ஸாக் மொஹமட்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post