சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது!


சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யபப்ட்டுள்ளார்.


சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 09 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டது. இதனையடுத்து கடந்த 06 நாட்களாக பொலிஸார் சித்ரா, தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.


$ads={2}


சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் குடும்பத்தினர் என பலரிடமும் பொலிஸார் துருவி துருவி விசாரணை செய்தனர். மகளின் தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத் காரணம் என சித்ராவின் தாயார் திட்டவட்டமாக தெரிவித்தும் வந்தார்.


இந்த வழக்கில் RDO விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் திங்கள்கிழமை இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post