கொலையில் முடிந்த வேலிச் சண்டை!

கொலையில் முடிந்த வேலிச் சண்டை!

கம்பஹா - மல்வதஹிரிபிடிய பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மல்வதஹிரிபிடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8.55 மணியளவில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


$ads={2}

பட்டேபொல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபருக்கும் பிரிதொரு நபருக்கும் இடையில் கம்பி வேலி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்யதேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post