ஹொரவ்பொத்தான, சியாம் ஹாஜியாருக்கு தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள்!

ஹொரவ்பொத்தான, சியாம் ஹாஜியாருக்கு தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள்!


ஹொரவ்பொத்தான, இஹல அங்குநொச்சிய கிராமத்தை சேர்ந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ சியாம் ஹாஜியார் அவர்களுக்கு அரசின் உயரிய விருதுகளான தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள் இன்று (27) அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.


$ads={2}


அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அரசின் மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய விருதான தேசமான்ய, தேசகீர்த்தி விருதுகள் வருட வருடம் வழங்கபட்டு வருகின்றது. இதனடிப்படையில் இவ்வருடமும் இவ்விருதுகளுக்காக 40 பேர் தெரிவு செய்யப்பட்டு இன்று அநுராதபுரத்தில் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வருடத்திற்கென தெரிவு செய்யப்பட்ட 40 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் தேசமான்ய, தேசகீர்த்தி அல்ஹாஜ் சியாம் ஹாஜியார் என்பது குறிப்பிடத்தக்கது.

- முஹம்மட் ஹாசில்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post