ஈஸ்டர் தாக்குதல் அதிர்ச்சி அடையவைக்கும் வெளிப்பாடு!! தாக்குதலை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி 1 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக பெற்றார்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் அதிர்ச்சி அடையவைக்கும் வெளிப்பாடு!! தாக்குதலை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி 1 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக பெற்றார்!!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக லங்கா ஈ-நியூஸ் (https://lankanetnews.com/?p=3234) வெளியிட்டுள்ள அதிர்ச்சியடையவைக்கும் தகவலின் தமிழாக்கம் கீழ்வருமாறு.


முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை நடத்த 1 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளார்.


இது தொடர்பில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதலுக்குப் பின்னால் மேலுமொரு பெரிய சக்தி இருப்பதாகக் சுட்டிக்காட்டி வந்த நிலையில், சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து இது தொடர்பான நாடாளுமன்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு விவாதத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசினை வலியுறுத்தினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


$ads={2}


ஈஸ்டர் தொடர் குண்டு வெடிப்புகளை நடாத்துவதற்கும், அதன் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் பற்றிய தகவல்களை மறைப்பதற்கும் ஒரு வெளிநாட்டுப் குழுவினர் அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 190 மில்லியன்) வழங்கியுள்ளதாக லங்கா ஈ-நியூஸ் தளத்திற்கு செய்தி கிடைத்துள்ளது.


குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட தினத்தில் இந்த தொகையின் இறுதி பரிவர்த்தனை சிங்கப்பூரில் முழுமையாக செய்யப்பட்டதாகவும், அன்றைய தினம் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு மைத்திரிபால சிறிசேன தாமதமாகிவிட்டதாகவும், இந்த பரிவர்த்தனை முடிவடையும் வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பது அவசியம் என்பதால் அவர் அவ்வாறு அங்கு தங்க நேர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஒப்பந்தத்திற்கு தரகராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மருமகனான, மற்றும் சதுரிக்கா சிறிசேனவின் கணவருமான திலின சுரஞ்சித் என்பவர், சிங்கப்பூரில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் வைத்து இறுதி ஒப்பந்தம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={1}


இந்நிலையில், தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூல காரணமானவர்கள் பற்றிய உண்மையான தகவல்களைத் தேடுவதற்குப் பதிலாக, அதை ‘குற்றச் சுத்திகரிப்பு ஆணையத்திடம்’ இருந்து மறைக்கிறது. தகவல்களை அறிந்தவர்கள் லங்கா ஈ-நியூஸ் செய்திச் சேவைக்கு உண்மைத் தகவல்களைத் தருகிறார்கள் என்பதனால் இந்த கொடூரமான குற்றம் குறித்த உண்மை நிலவரத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.


தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் இது குறித்த உண்மை நிலையை உண்மையாக கண்டுபிடிக்க விரும்பினால் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். மேலும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாருடன் குறித்த பணத்தொகையை மறைத்தார் என்பதை அம்பலப்படுத்துவோம்.


சிறிசேனா யாருடன் பணத்தை மறைத்தார்?


ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு வசதியாகவும், அதன் உண்மையான பின்னணிகளையும், மேலும் பல ஊழல்களையும் மறைத்து வைப்பதற்காக மைத்திரிபால சிறிசேனாவிடம் பெறப்பட்ட லஞ்சப் பணத்தை மறைத்து வைத்த முக்கிய நபர்களில் ஒருவராக ‘ஜப்பான் இந்திக என்றழைக்கப்படும் இந்திக சமரசிங்க’ எனும் நபர்  உள்ளார். அவரின் பெயரில் தான் குறித்த பணம் வங்கிகளில் உள்ளது.


ஜப்பான் இந்திக என்பவர் இராஜகிரிய பகுதியில் உள்ள ராயல் பார்க் சொகுசு அடுக்குமாடி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.


ஜப்பான் இந்திகவின் ராயல் பார்க் இல்லத்தில் சிறிசேனாவிற்கு ஜப்பானிய பெண்களை சப்லை செய்யும் நிலையில் சிறிசேனாவிற்கும் இந்திக்கவுக்கும் இடையிலான நட்பு ஒரு சிறந்த நம்பகமான நட்பாக மாறியது.


இந்திகவின் படுக்கையறையில் உள்ள சொகுசு படுக்கை மெத்தை சிரிசேனாவின் ‘அனுராதா ஜயவிக்ரம’ எனும் பெண் இந்த வீட்டிற்கு எத்தனை முறை வந்தார் என்பதைக் காட்டிக்கொடுக்கும்.


குறிப்பாக, மோசடி நடவடிக்கைகள் மூலம் நட்பை வளர்த்துக் கொண்ட சிறிசேன, மில்லியன் கணக்கு ரூபாய் மதிப்புள்ள மக்கள் மின்னணு அதிர்வெண்களை (electronic frequencies), அவை தனது பெற்றோருக்குச் சொந்தமானதைப் போன்று, அவற்றை ஜப்பான் இண்திகவிற்கு கொடுத்துள்ளார். ஜப்பான் இந்திக அந்த இலவச மின்னணு அதிர்வெண்களை ராஜபக்ஷ மகன்களுக்கு ரூ. 2,000 மில்லியனிற்கு மேல் விற்றுள்ளார். இதைத்தான் இன்று "Supreme TV" என்று அழைக்கப்படுகிறது.


இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் ஒரு மில்லியன் டாலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என சிறிசேன கூறினால், அந்த நாளில் ஜப்பான் இந்திக யாரிடமிருந்து ஒரு மில்லியன் டாலர்களை தனது கணக்கில் பெற்றார் என்பதை சரிபார்க்க வேண்டும். இதைவிட முக்கியமானது என்னவென்றால், யார் பணம் பெற்றார்கள் என்பதல்ல, யார் பணம் கொடுத்தார்கள் என்பது தான் முக்கியமாக கவணிக்கப்பட வேண்டிய விடயமாகும்.


இதற்கு சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வரை நாடு இன்னும் பெரும் ஆபத்திலேயே உள்ளது.


ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் பற்றிய உண்மை நிலையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு இந்த வெளிப்பாடுகளை நாங்கள் செய்கிறோம், ஏனென்றால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆணையத்தின் முன் சாட்சியமளித்த தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் ஏ. என். சிசிர மெண்டிஸ் வழங்கிய முக்கியமான அறிக்கை ஒன்றில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படும் வரை நாடு ஆபத்தில் உள்ளது என்ற விடயத்தை தெரிவித்திருந்தார். உண்மையில், இன்று தேட வேண்டியது சஹ்ரானை அல்ல, மாறாக இந்த குண்டுவெடிப்பை வழிநடத்திய சூத்திரதாரிகளையாகும். ஏனெனில் நாளை இதுபோன்ற பயங்கரமான பேரழிவைச் செய்வது அவர்களுக்கு எளிதானது.


$ads={2}


ஈஸ்டர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் குறித்து லங்கா ஈ-நியூஸ் மிக முக்கியமான தகவல்களைப் பெற்றுள்ளது. எங்கள் நிபுணர் பகுப்பாய்வு மூலம் அவற்றை பகுப்பாய்வு செய்கிறோம். உத்தியோகபூர்வ புலனாய்வாளர்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்கிறார்களானால், அவர்கள் விசாரிக்கத் தேவையான தகவல்களையும், பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையையும் நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.


எங்களது பிள்ளைகளுக்கு அமைதியான நாடு தேவை என்பதை நாங்கள் யாரும் விரும்பாதவர்கள் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.


-சந்திரா பிரதீப் (English: https://lankanetnews.com/?p=3234 | Sinhala: https://www.lankaenews.com/news/11616/si)

Original Post in Sinhala - Click Here

(தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.எம் அஹ்மத்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.