இன்றைய தினம் 52 வயது பெண் அடங்கலாக மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு!

இன்றைய தினம் 52 வயது பெண் அடங்கலாக மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு!


கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 66 வயது ஆண், ராகம பகுதியை சேர்ந்த 75 வயது பெண், கடவத்தை பகுதியை சேர்ந்த 78 வயது பெண் மற்றும் வவுனியா பகுதியை சேர்ந்த 52 வயது பெண் போன்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இந்நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு புதிதாக 668 பேர் இனம்காணப்பட்டுள்ள நிலையில் மேலும் 650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post