கூட்டிணைவு ஆர்பாட்டத்திற்கு சிலோன் தௌஹீத் ஜமாஅத், ACJU உள்ளிட்ட 54க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு!

கூட்டிணைவு ஆர்பாட்டத்திற்கு சிலோன் தௌஹீத் ஜமாஅத், ACJU உள்ளிட்ட 54க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு!


கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வேண்டி எதிர்வரும் 31.12.2020 அன்று நடத்தப்படவுள்ள "முஸ்லிம் அமைப்புகளின்" கூட்டிணைவு ஆர்பாட்டத்திற்கான அடுத்தகட்ட பணிகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக இஸ்லாமிய அமைப்புகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதல் கடிதம்.


$ads={2}


அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, தேசிய சூரா சபை, YMMA, முஸ்லிம் கவுன்சில், கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம், ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, முஸ்லிம் இடதுசாரி முன்னனி உள்ளிட்ட 54 க்கும் அதிகமான இஸ்லாமிய இயக்கங்களுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இயக்கங்களின் கூட்டிணைவுடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களும் இணைந்து நடத்தும் இந்த ஆர்பாட்டம் ஜனாஸா அடக்கக் கோரிக்கைக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டுமென குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post