2021 இல் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ

2021 இல் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ


புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் காரணமாக 2021இல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது கடினமான விடயமாக காணப்படலாம் என கொரோனா நோய் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.


$ads={2}


குறிப்பிட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாங்கள் கொரோனா வைரஸ் ஒழிப்பு திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.


நாங்கள் 2021இல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனினும் புதியவகை வைரஸ்கள் பரவிவருவதால் இது கடினமானதாக காணப்படுகின்றது.


பிரிட்டனில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்தது நோயாளர்கள் எண்ணிக்கையை கட்டுபடுத்துவதற்காவது நாங்கள் பல நாடுகளில் இருந்து மருந்துகளை கொண்டு வர முயல்கின்றோம்.


கொரோனா வைரஸ் மருந்துகள் பல காணப்படுகின்றன. அவற்றின் திறனை அறிவது கடினம். எனினும் எதிர்காலத்தில் இந்த மருந்துகளை அதிக ஆபத்தான பிரிவை சேர்ந்தவர்களிற்கு பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என சண்டே டைம்ஸ்க்கு தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post