ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் iCar எனும் தானியங்கி கார்கள் தொடர்பான விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் iCar எனும் தானியங்கி கார்கள் தொடர்பான விபரம் வெளியானது!


உலகம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் மனிதனின் கற்பனைக்கு எட்டியதையும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியாக்கியுள்ளது.


அந்தவகையில், காரில் ஏறி உட்கார்ந்தலும் நாம் குரல் மூலம் ஸ்டார் செய்யச் சொன்னதும் தானே ஸ்டார்ட் ஆகக்கூடிய எலான் மஸ்கின் டெஸ்லா, கியா போன்ற கார்கள் விற்பனையில் சாதனைப் படைப்பதுடன் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் உலகின் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். மின்சாதனங்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


$ads={2}


அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தானியங்கி கார்களை 2024 ஆண்டு வாக்கில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் தானியங்கி கார்கள் முற்றிலும் புதுவகை பேட்டரி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


தானியங்கி கார்களை உருவாக்கும் குழு பிராஜக்ட் டைட்டன் எனும் குறியீட்டு பெயரில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு 2024 ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்பிள் நிறுவன தானியங்கி கார்களில் LIDAR மற்றும் புதுவகை பேட்டரிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதில் LIDAR சென்சார் சாலையின் முப்பறிமான காட்சியை உருவாக்கி, பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்யும். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ சீரிசில் இதே தொழில்நுட்பத்தை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.