நேற்று நாட்டில் பதிவான 668 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம்!

நேற்று நாட்டில் பதிவான 668 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம்!

இன்று (16) இதுவரையில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில், கொழும்பு மாவட்டத்தில் 309 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 104 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் இருவரும் அம்பாறை மாவட்டத்தில் நால்வரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் அடங்குகின்றனர்.


$ads={2}

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 309 பேரில் கிருளப்பனையில் 14 பேரும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் 19 பேரும் பொரளையில் 24 பேரும் தெமட்டகொடையில் 11 பேரும் மருதானையில் 25 பேரும் புளூமென்டல் பகுதியில் 13 பேரும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் மட்டக்குளியில் 62 பேரும் புறக்கோட்டையில் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளையில் 06 பேரும் களனியில் நால்வரும் மினுவாங்கொடையில் இருவரும் மஹர பகுதியில் 68 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 157 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 34,121 ஆக அதிகரித்துள்ளதோடு, தொற்றிலிருந்து 24,867 பேர் குணமடைந்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post