பேலியகொட மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது!

பேலியகொட மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது!

கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மத்திய மீன் வர்த்தக கட்டிட தொகுதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக முழுமையாக நவீன மயத்தில் மேற்கொள்ளப்பட்டு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் வரையில் வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக மொத்த வர்த்தகத்திற்காக மாத்திரம் கட்டிடத்தை மீண்டும் திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.


$ads={2}

இதற்கமைவாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி ஆலோசனைகளுக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்ட மொத்த வர்த்தக அலுவல்களுக்காக பேலியகொடை மத்திய மீன் வர்த்தக கட்டிட தொகுதியை இன்று திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post