
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பிரதேசத்தில் இதுவரையில் 741 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், இவர்களில் 601 தொற்றாளர்கள் அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
$ads={2}
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 55 கர்ப்பிணி தாய்மாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
-எம்.மனோசித்ரா