இலங்கைக்கு 500 சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

இலங்கைக்கு 500 சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

முழுமையாக சுகாதார ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 500 சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன இதற்காக அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2021ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி முதல் ஒரு பரீட்சாத்த திட்டத்தின் கீழ் 12 இடங்களுக்கு சுற்றுலாப்பயணிள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

$ads={2}

இதன்கீழ் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 500 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இலங்கையில் அவர்கள் செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இடங்களில் யால, சீகிரியா, தலதா மாலிகை, பின்னவல மற்றும் மின்னேரியா ஆகியவை அடங்குகின்றன. ஆனால் அவர்கள் இலங்கை மக்களுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சுற்றுலாப் பயணிகள், பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் அல்லது மத்தளை சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வந்தவுடன் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இந்தநிலையில் இந்த பரீட்சாத்த திட்டம் பயனளித்தால், சுற்றுலாவுக்கு நாட்டை மேலும் திறக்க வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யலாமா என்பதை தீர்மானிக்க ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post