இன்றைய ஆராதனையின் போது தேவாலயங்களில் தாக்குதல்? 31 வயது வாலிபர் கைது!

இன்றைய ஆராதனையின் போது தேவாலயங்களில் தாக்குதல்? 31 வயது வாலிபர் கைது!


வாட்ஸாப் வழியாக போலி செய்திகளை பரப்பியதற்காக கந்தானை பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.


சில தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வாட்ஸாப் வழியாக பொய் பிரசாரம் செய்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}


சந்தேக நபர் நேற்றைய தினம் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த சிலருக்கு ஆங்கில மொழியில் இந்த வாட்ஸாப் செய்தியை அனுப்பி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


ஞாயிற்றுகிழமை தேவாலயங்களில் நடக்கும் ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடக்க உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த போலியான செய்தியை உருவாக்கியவர் வெல்லம்பிட்டியை சேர்ந்த 31 வயதான, தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காய்வாளராக கடமையாற்றும் நபர் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியலில் வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post