20 நாள் குழந்தை தகனம் விவகாரம்; பெற்றோர் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 நாள் குழந்தை தகனம் விவகாரம்; பெற்றோர் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!


கொரோனாவால் உயிரிழந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் தங்கள் சட்டத்தரணி மூலமாக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.


லேடி ரிஜ்வே மருத்துவமனையில் அதிகாரிகள் செயற்பட்ட விதத்தினை தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள பெற்றோர் மருத்துவமனை அதிகாரிகள் அவசரஅவசரமாக உடலை தகனம் செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.


தங்கள் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து குழந்தையின் உடலை இரண்டாவது PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக தமது மனுவில் தெரிவித்துள்ள பெற்றோர் ஆனால் அதற்கு அனுமதிக்ககிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.


$ads={2}


நவம்பர் 18ஆம் திகதி பிறந்த குழந்தை நல்ல உடல்நிலையுடன் காணப்பட்டது,எங்கள் பகுதி முற்றாக முடக்கப்பட்டிருந்ததன் காரணமாக எவருடனும் நாங்கள் தொடர்பிலிருக்கவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


எனினும் 07ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டது இரவு பத்துமணியளவில் குழந்தையை லேடி ரிஜ்வே மருத்துவமனைக்கு அவசரஅவசரமாக கொண்டு சென்றோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


மருத்துவமனையில் பெற்றோர்களையும் குழந்தையையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னர் குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர் என பெற்றோர்கள் தங்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவில் தெரிவித்துள்ளதுடன் மருத்துவமனை அதிகாரிகள் தங்களை குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு செல்வுமாறு கேட்டுக்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


குழந்தைக்கு பாலூட்டி பராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு தாய் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததுடன் மருத்துவமனையுடன் தொலைபேசி மூலம் தொடபுகொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என பெற்றோர் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.


பின்னர் 08ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து அழைத்து PCR சோதனை நடத்தப்பட்டது குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர் குழந்தையின் நிலைமை குறித்து தகவல்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டனர் எனவும் பெற்றோர் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.


எனினும் எங்களிற்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரவில்லை இதனை தொடர்ந்து அதிகாலை 5.15 இற்கு நாங்கள் மருத்துமனையை தொடர்பு கொண்டவேளை அதிகாலையில் குழந்தை இறந்துவிட்டது என தெரிவித்தனர் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.


$ads={2}


இதன்பின்னர் குழந்தையின் உடலை தகனம் செய்வதற்கு அவசரப்பட்டனர். பெற்றோரையோ உறவினர்களையே குழந்தையின் உடலை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் எழுத்து மூலம் சம்மதத்தை கோரினர் எனவும் அடிப்படை உரிமை மீறல் மனுவில் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.