விபச்சார விடுதி நடத்தியதாக சிறையில் இருந்த 'ஜீனா மெடம்' விடுதலை!

விபச்சார விடுதி நடத்தியதாக சிறையில் இருந்த 'ஜீனா மெடம்' விடுதலை!


கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் விபச்சார விடுதி நடத்தியதற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 'ஜீனா மெடம்' என அழைக்கப்படும் ரோஸ்மேரி ஃபெலிசியா பெரேராவை  உச்ச நீதிமன்றம் இன்று விடுவித்தது என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


விபச்சாரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தியதற்காக கடந்த 2012 இல், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.


$ads={2}


உச்சநீதிமன்றம் இன்று அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததாக தீர்ப்பளித்தது.


விபச்சாரத்தில் மற்ற பெண்களை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறி, ஒரு விபச்சாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என்ற அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post