
மேல் மாகாணத்திலிருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கு பயணிக்கும் போது அதன் எல்லைப்புறமான தங்ஓவிட்ட பகுதியில் இந்த நடமாடும் Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.
$ads={2}
நிட்டம்புவ, மீரிகம, வேயாங்கொட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், மீரிகம சுகாதார வைத்திய அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த இடத்தில் 136 பேருக்கு இன்று Rapid Antigen பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் COVID தொற்றுக்குள்ளானவர் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.